கோவையில் பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான ‘அடிசியா டெவலப்பர் சார்பில் பொதுமக்கள் நிலம் வாங்குவது விற்பதில் உள்ள சந்தேகங்களை தீர்க்க "அலர்ட் கோவை" என்ற புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. ரேரா, டிடிசிபி, பட்டா உள்ளிட்ட முக்கிய ஆவண விவரங்கள் முதல் நில வளர்ச்சி திட்டங்கள் வரை அனைத்து தகவல்களையும் பொதுமக்கள் எளிதாக பெற இணையதளம் மற்றும் இரண்டு பிரத்தியேக அலுவலகங்கள் நிறுவப்பட்டுள்ளது. நிலம் வாங்க விரும்பும் மக்கள் நேரடியாக வந்து கேள்விகள் கேட்டு உதவி பெறலாம் என நிறுவனர் மணிகண்டன் தெரிவித்தார்.