இறப்பை முன்கூட்டியே உணர்ந்த நடிகர் ராஜேஷ்.. துரத்தி விட்டாலும் திரும்ப திரும்ப வரும் வளர்ப்பு நாய்

Update: 2025-05-31 02:44 GMT

நடிகர் ராஜேஷின் உடலை, அவரது வளர்ப்பு நாய் பார்த்து ஏங்கிய காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜேஷின் உடலுக்கு திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலர் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், வளர்ப்பு நாய் ஒன்று அவரது உடலை வாசலில் அமர்ந்து ஏக்கத்துடன் பார்த்தது. அதனை உறவினர்கள் விரட்டிவிட்டாலும், மீண்டும் அதேபோல் அமர்ந்து நடிகர் ராஜேஷின் உடலை பார்த்துக்கொண்டிருந்தது காண்போரை கலங்க செய்தது.

மறைந்த நடிகர் ராஜேஷ், ஒரு மாதத்திற்கு முன்பே தனது கல்லறையில் வைக்கப்பட வேண்டிய கல்வெட்டில் இடம்பெறும் வசனத்தை தனது நண்பருமான சேலம் ரத்னா ஸ்டுடியோ உரிமையாளரின் பேரனாகிய விவேக்கிடம் கொடுத்ததாக தெரியவந்துள்ளது. தனது கல்லறையில் வைக்கப்படும் கல்வெட்டிற்காக, அவர் தேர்வு செய்த கிரானைட் கல், அவர் எழுதிய வாசகங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. அந்தக் கிரானைட் கல்லின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்