பஸ் லாரி நேருக்கு நேர் மோதல்.. நசுங்கி செத்த ஓட்டுநர்.. துடிதுடிக்கும் 20 உயிர்கள்
தேனி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டிப்பட்டி மின்வாரிய அலுவலகம் அருகே மதுரையில் இருந்து போடி நோக்கி சென்ற தனியார் பேருந்தும் தேனியில் இருந்து ஆண்டிபட்டிக்கு சிமெண்ட் லோடு ஏற்றி வந்த சரக்கு வேனும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் சரக்கு வேன் டிரைவர் ஆண்டிப்பட்டி சீனிவாசா நகரை சேர்ந்த 44 வயதுடைய முத்துலிங்கம் என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இடிபாடுகளுக்குள் சிக்கி கிடந்த வேன் டிரைவர் முத்துலிங்கத்தை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இரண்டு புல்டோசர் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு மோதியை இரண்டு வாகனங்களையும் பிரித்து இடுப்பாடுகளுக்குள் சிக்கி இருந்த டிரைவர் முத்துலிங்கத்தை பிணமாக மீட்டனர்.