Suruli Falls || ஆசையோடு வந்த டூரிஸ்ட்.. பயத்தை காட்டிய சுருளி அருவி

Update: 2025-06-26 07:46 GMT

சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்தன் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்கவும் அருவிக்கு செல்லவும் வனத்துறையினர் தடை.

தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சுருளி அருவி சுற்றுலாத்தலமாகவும் ஆன்மீக தலமாகவும் விளங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் வருகை தரும் வெளி மாநிலம் மற்றும் மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் நீராடி பின்னர் சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

கடந்த சில தினங்களாக தேனி மாவட்டத்தில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை முதல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக சுருளி அருவியில் நீர் பிடிப்பு பகுதிகளில் அரிசி பாறை, ஈத்தங்காடு, தூவனம் அணை பகுதியிலும் மழை பெய்து காற்றாற்று நீர் ஓடைகளில் தண்ணீர் அளவு கூடியதால் சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி வனத்துறையினர் இன்று சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

தொடர்ந்து சுருளி அருவி நீரின் அளவை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர் .

நீர் வரத்து குறைந்த பின்னரே சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்