திருப்பூர் அருகே பைக் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் சட்டக்கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊத்துக்குளி அடுத்த பாப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த நரேந்திர பிரசாத், செங்கப்பள்ளியில் இருந்து கொடியாம்பாளையம் சாலையில் வந்து கொண்டிருந்த போது, இந்த விபத்து நேர்ந்துள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.