வேலூரில் புதிதாக திறக்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனை சுற்றிப் பார்க்க திரண்ட மக்களால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். திறப்பு விழாவை தொடர்ந்து மருத்துவமனையை சுற்றிப் பார்க்க மக்கள் முண்டியடித்தனர். பொது மக்களை தடுத்து நிறுத்தி காவல் துறையினர் தடுப்புகளை அமைத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.