இறந்தும் துடிக்கும் இதயம்.. 8 நிமிடத்தில் காப்பாற்றப்பட்ட சிறுவன் உயிர்
கோவையில் இதயம் மாற்று அறுவை சிகிச்சைக்காக கே.ஜி. மருத்துவமனையிலிருந்து ராயல் கேர் மருத்துவமனைக்கு, எட்டே நிமிடங்களில் ஆம்புலன்ஸ் மூலம் இதயம் கொண்டுவரப்பட்டு சிறுவனின் உயிர் காப்பாற்றப்பட்ட நிகழ்வு பாராட்டை பெற்றுள்ளது. கே.ஜி. மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த முதியவர் மூளைச்சாவு அடைந்த நிலையில் அவருடைய இதயம், ராயல் கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவனுக்குப் பொருத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் "சென்னையில் ஒரு நாள்" பட பாணியில், இதயத்தை விரைந்து எடுத்து செல்ல அனைத்து சிக்னல்களும் நிறுத்தப்பட்டு ஆம்புலன்ஸுக்காக 'கிரீன் காரிடார்' உருவாக்கப்பட்டது. இதனால் அரை மணி நேரம் ஆகும் பயண தூரத்தை, ஆம்புலன்ஸ் வெறும் 8 நிமிடங்களில் கடந்து மருத்துவமனையை அடைந்தது.