நண்பனே நண்பனுக்கு எமனான பயங்கரம்... உயிர் பிரியும் கடைசி நேரத்திலும் இருவரும் குடித்த சம்பவம்

Update: 2025-07-06 02:55 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே ஊராட்சி செயலர் சந்தேக மரண வழக்கில், உற்ற நண்பனே கொலை சம்பவத்தை செய்திருப்பதாக தெரியவந்துள்ளது. சாங்கியம் கிராமத்தின் ஊராட்சி செயலராக இருந்தவர் அய்யனார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில், ஜி.பி தாங்கல் கிராமத்தை சேர்ந்த அய்யனாரின் நண்பரான ஐயப்பனிடம் போலீசார் விசாரணை செய்தனர். சம்பவத்தன்று இரவு, மது அருந்தும் போது இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டதாகவும், இதில் ஏற்பட்ட பிரச்னையில் அய்யனாரை, ஐயப்பன் கொலை செய்ததாகவும் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்