Mini Bus in Ariyalur Village | 77 ஆண்டு கால ஏக்கம்- ஊரே ஒன்று கூடி புது மருமகளை போல மினி பஸ்ஸை வரவேற்ற காட்சி
77 ஆண்டுகளுக்கு பின் பேருந்து சேவை - மக்கள் உற்சாகம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே 77 ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில், கிராமத்திற்கு வந்த மினி பேருந்தை ஆரத்தி எடுத்து பொதுமக்கள் கொண்டாடினர். தா.பழூர் அருகே உள்ள அடிக்காமலை கிராமத்திற்கு பல ஆண்டுகளாக பேருந்து சேவை என்பது இல்லாத நிலையில், நாயகனைபிரியாள் கிராமத்திலிருந்து அடிக்காமலைக்கு புதிய வழித்தடத்தில் மினி பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தங்களது கிராமத்திற்கு வந்த பேருந்தை கைதட்டி வரவேற்ற கிராம மக்கள், ஆரத்தி எடுத்தும் ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு சால்வை அணிவித்தும் மரியாதை செய்தனர்.