உள்ளே ரூ.50 லட்சம் பணம்.. இரவு முழுவதும் திறந்து கிடந்த வங்கி

Update: 2025-06-05 05:47 GMT

இரவு முழுவதும் திறந்து கிடந்த SBI வங்கி

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சி.டி.எச் சாலையில் அமைந்துள்ள அரசு வங்கி இரவு முழுவதும், பாதுகாப்பற்ற முறையில் திறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆவடி காவல்நிலைய போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போது, சி.டி.எச் சாலையில் இயங்கி வரும் அரசு வங்கியின் கதவு பூட்டப்படாமல் திறந்திருப்பதை பார்த்தனர். உடனடியாக வங்கி மேலாளருக்கு தகவல் தரப்பட்டு வரவழைக்கப்பட்டனர். பின்னர் வங்கியின் உள்ளே ஆய்வு செய்த போது எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை என உறுதிப்படுத்தப்பட்டது. வங்கி ஊழியர்கள் கவனக்குறைவாக செயல்பட்டதும், 50 லட்சம் ரூபாய் வங்கியில் இருப்பு இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்