20 வருசம் ஜெயில் - தீர்ப்பு வந்ததும் இடிந்து விழுந்து ஏங்கி ஏங்கி கதறிய பெண்

Update: 2025-04-30 07:15 GMT

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில், பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் மேலும் ஒரு பெண்ணுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2014-ல் 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவிகள் இருவரை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில், மதபோதகர் உள்பட 16 பேருக்கு 30 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் வழக்கில் தொடர்புடைய ஜெபினா என்ற மற்றொரு பெண்ணுக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

Tags:    

மேலும் செய்திகள்