சென்னையில் காணாமல் போன சிறுவர்கள்..நேரில் பார்த்து விசாரித்து அதிர்ந்த போலீஸ்

Update: 2025-04-27 02:48 GMT

சென்னை RA புரத்தில் இருந்து மாயமான இரண்டு சிறுவர்களை மயிலாப்பூர் ரயில் நிலையத்தில் வைத்து போலீசார் மீட்டனர். RA புரம் அன்னை தெரசா நகர் பகுதியில் பீகாரை சேர்ந்த குடும்பத்தினரின் சிறுவர்கள் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தனர். அப்போது கடைக்கு செல்வதாக கூறி சென்ற அந்த 2 சிறுவர்களும் அதன் பின்னர் மீண்டும் வீடு திரும்பவில்லை . இந்நிலையில், சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் விளையாட்டை பார்க்கப்போவதாக சக நண்பர்களிடம் கூறி சென்ற சிறுவர்களை மயிலாப்பூர் ரயில் நிலையத்தில் வைத்து போலீசார் மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்