Mullai periyar dam || முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 1600 கன அடி நீர் திறப்பு

Update: 2025-06-14 13:06 GMT

முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை எதிரொலியாக, முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 1600 கன அடி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது. முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் 41 மில்லி மீட்டரும், தேக்கடி பகுதியில் 16.4 மில்லி மீட்டரும் என மழை பதிவாகியுள்ளது. இந்த நிலையில், முல்லை பெரியாறில் அணைக்கு நீர்வரத்து 1,190 கன அடியாக அதிகரித்தது. இதனால்,1600 கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனிடையே, ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் சூழலில், பொதுமக்கள் யாரும் குளிக்கவோ, கால்நடைகளை குளிக்க வைக்கவோ ஆற்றில் இறங்கக்கூடாது என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்