தந்தை இறந்த சோகத்தில், பத்தாம் வகுப்பு மாணவன் தேர்வுக்கு சென்றுவிட்டு கதறி அழுதபடியே வீடு திரும்பிய சம்பவம் நெஞ்சை கணக்கச் செய்தது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஊரணிபுரம் தெற்கு கிராமத்தை சேர்ந்தவர் ராஜபார்ட். இவரது மகன் மாதவன் அருகில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், ராஜபார்ட் திடீரென உயிரிழந்ததின் காரணமாக, மகன் மாதவன் துக்கத்தை மறைத்துக் கொண்டு, அறிவியல் பொதுத்தேர்வை எழுதச் சென்றார். தேர்வு முடிந்து வீடு திரும்பியவர் தன் தந்தையின் சவப்பெட்டியை முத்தமிட்டுஅழுத காட்சி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.