Today Headlines | மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (10.07.2025)

Update: 2025-07-10 10:59 GMT

அ.தி.மு.க-வை காப்பாற்ற முடியாத நிலையில், எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் தமிழகத்தை மீட்க இறங்கியுள்ளார்...

பாஜகவினரே ஆச்சரியப்படும் அளவுக்கு ஈபிஎஸ்ஸின் செயல்பாடு இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்...

மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு புகாரில் 5 மண்டலத் தலைவர்கள் ராஜினாமா செய்த விவகாரம்...

'உள்ளாட்சிகளில் நல்லாட்சி' என வெற்று விளம்பரத்திற்காக முதல்வர் பேசுகிறார் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்...

பா.ம.க செயற்குழு கூட்டத்தில் மகள் பங்கேற்றது குறித்து கட்சி நிறுவனர் ராமதாஸ் கருத்து...

'போக போக தெரியும்' என்ற பாடல் வரியை பாடியபடி புன்சிரிப்புடன் நகர்ந்த ராமதாஸ்...

என்னுடைய பெயரை போடக் கூடாது...இனிசியலை போட்டுக்கொள்ளலாம்...

அன்புமணியை மறைமுகமாக சாடிய பா.ம.க நிறுவனர் ராமதாஸ்... 

பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையிலான செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்க கூடாது....

டெல்லி சென்று தலைமை தேர்தல் ஆணையத்தில் முறையிட அன்புமணி தரப்பு முடிவு..

நெல்லை வடக்கன்குளத்தில், பள்ளியின் தங்கும் விடுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து ஏழாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு...

உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்...

தமிழ் இயக்கத்தில், கார்த்தி நடிக்கும் படத்திற்கு 'மார்ஷல்' என தலைப்பிடப்பட்டுள்ளது...

சென்னையில் பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு....

பஞ்சாப் மாநிலம் லூதியானா அருகே அழுகிய மாம்பழம் என்று கூறி பட்டப்பகலில் சாக்குமூட்டையில் பெண்ணின் சடலத்தை வீசிச் சென்ற நபர்கள்...

மர்ம நபர்கள் குறித்து போலீஸில் புகார் அளித்த பொதுமக்கள்...

கடலூரில், மது குடிக்க பணம் தராத தாத்தா - பாட்டி மீது கொடூர தாக்குதல் நடத்திய பேரன்...

தாத்தா உயிரிழந்த நிலையில், பாட்டி மருத்துவமனையில் அனுமதி....



Tags:    

மேலும் செய்திகள்