IPL-ல் சம்பவம் செய்த வீரர்கள் - கோலியின் நியூ ரெக்கார்ட்... SRH தட்டி தூக்கிய மெயின் அவார்டு

Update: 2024-05-27 07:24 GMT

கோலாகலமாக நடந்து முடிந்த 17வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் யார் யார் என்னென்ன விருதுகளை வென்றார்கள் என்பது பற்றி விவரிக்கிறது, இந்த செய்தித் தொகுப்பு....

2024ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரருக்கான ஆரஞ்ச் கேப் பெங்களூரு வீரர் விராட் கோலிக்கு வழங்கப்பட்டுள்ளது. 15 போட்டிகளில் விளையாடி 741 ரன்களை கோலி குவித்தார். 2வது முறையாக ஆரஞ்ச் கேப் பெற்ற முதல் இந்திய வீரர் என கோலி புதிய சாதனை படைத்துள்ளார்.

அதிக விக்கெட் வீழ்த்தியவருக்கான பர்ப்பிள் கேப் பஞ்சாப் பவுலர் ஹர்ஷல் படேலுக்கு வழங்கப்பட்டுள்ளது. 14 போட்டிகளில் ஆடிய ஹர்ஷல் படேல் தனது நேர்த்தியான பவுலிங்கால் 24 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.

நடப்பு சீசனின் வளர்ந்து வரும் வீரருக்கான விருதை ஹைதராபாத் பேட்டர் நிதிஷ்குமார் ரெட்டி வென்று இருக்கிறார். 13 போட்டிகளில் விளையாடிய அவர் 303 ரன்கள் சேர்த்ததுடன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளார்.

மிகவும் மதிப்பு வாய்ந்த வீரருக்கான விருதை கொல்கத்தா ஆல்ரவுண்டர் சுனில் நரைன் பெற்றுள்ளார். தொடக்க வீரராக களமிறங்கி பல போட்டிகளில் வாண வேடிக்கை நிகழ்த்திய நரைன் 488 ரன்களை விளாசியதுடன் தனது மந்திர பந்துவீச்சால் 17 விக்கெட்டுகளையும் வசப்படுத்தியுள்ளார். 3வது முறையாக இந்த விருதை நரைன் வென்றுள்ளார்.

தொடரில் மிகுந்த அறத்துடன் ஆடிய அணிக்கான fair play விருதை ஹைதராபாத் வென்று ஆறுதல் கண்டுள்ளது.

அதிக சிக்சர்கள் அடித்த வீரருக்கான விருதை 42 சிக்சர்களுடன் அந்த அணியின் அபிஷேக் சர்மாவும், அதிக ஃபோர் அடித்த வீரருக்கான விருதை 64 ஃபோர்களுடன் டிராவிஸ் ஹெட்டும் பெற்றுக் கொண்டனர். இதேபோல் சிறந்த ஆடுகளம் மற்றும் மைதானத்திற்கான விருது ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது.

அட்டகாசமாக விளையாடி சிறந்த ஸ்ட்ரைக் ரேட் கொண்டிருந்த வீரருக்கான விருதை டெல்லி அணியின் ஜேக் ஃப்ரேசரும் சிறந்த கேட்ச்சுக்கான விருதை கொல்கத்தா அணியின் ரமன்தீப் சிங்கும் வென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்