சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் போட்டியில் ஜாஸ் பட்லர் Jos Buttler தலைமையிலான இங்கிலாந்து அணியும், ஹஸ்மதுல்லா ஷாகிடி Hashmatullah Shahidi தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் மோத உள்ளன. லாகூரில் உள்ள கடாஃபி Gaddafi மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்க உள்ளது. இன்றையப் போட்டியில் வெல்லும் அணி குரூப் பி பிரிவில் அரையிறுதி ரேஸில் நீடிக்கும். அதே சமயம் தோல்வி அடையும் அணி தொடரில் இருந்து வெளியேற நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.