இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுவதற்காக விசாகப்பட்டினம் சென்றுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர், அங்குள்ள புகழ்பெற்ற வராக லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள், தொடரில் வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜைகளில் ஈடுபட்டனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.