"ரூ.1 லட்சம் கோடி வட்டி மட்டுமே கட்டும் தமிழக அரசு" - அன்புமணி பரபரப்பு பேட்டி
தமிழகத்தின் கடன் 15 லட்சம் கோடியாக உள்ளதாக கூறிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், வட்டியாக மட்டும் ஆண்டிற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் அரசு கொடுத்து வருவதாக தெரிவித்தார். திண்டிவனத்தில் உள்ள தைலாபுரத்தில் பாமக பொது நிழல் நிதி அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் தமிழகத்தின் கடன் மற்றும் வட்டி தொகை குறித்த தகவல்களை அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். மேலும், கனிமவளம் மூலம் கிடைக்கும் வருவாயை முறைப்படுத்தினால் நிதி பற்றாக்குறையை சமாளிக்க முடியும் என அவர் தெரிவித்தார்.