கடைசி நேரத்தில் ஷாக் கொடுத்த போலீஸ்.. அதிர்ச்சியான புஸ்ஸி ஆனந்த்.. தவெகவினர் கடும் வாக்குவாதம்
சென்னையில், தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் பங்கேற்ற நலத்திட்ட வழங்கும் நிகழ்ச்சிக்கு இறுதி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டதால், போலீசாருடன் அக்கட்சி நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தியாகராய நகரில், தவெக சார்பில் சாலையோர கடைகளுக்கு நிழற்குடை வழங்குவது உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்க அக்கட்சியின் பொதுச்செயலாளர் வருகை தந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பே நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்ட நிலையில், இறுதி நேரத்தில் போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி போலீசார் அனுமதி மறுத்ததாக தெரிகிறது. இதனால், போலீசாருக்கும், தவெக நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து சுமார் 500 கடைகளுக்கு நிழற்குடைகளை வழங்கிய பின்னர் ஆனந்த் புறப்பட்டு சென்றார்.