திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் தெரிந்த மாற்றம் - அமைச்சர்கள், தி.மு.க. எம்.பி. நேரடி ஆய்வு
கடல் சீற்றம் காரணமாக, தொடர் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் கடற்கரை பகுதியை, அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், தி.மு.க. எம்.பி. கனிமொழி, ஐஐடி நிறுவன பேராசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, கடலரிப்பு என்பது தமிழ்நாட்டில் மட்டுமல்ல... உலகம் முழுவதும் உள்ளதாக தெரிவித்தார்.