திருவண்ணாமலை மாவட்டம் இளநீர் குன்றத்தில், மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்திற்கு ஆதரவாக, தவறான செய்தியை பரப்புவதாக கூறி, திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜோதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தனின் உருவ பொம்மைகளை எரிக்க விவசாயிகள் முயன்றனர். அப்போது போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது