பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்க்கை வரலாறு படமாக உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசியலில் சுமார் 40 ஆண்டுகளாக ராமதாஸ் முக்கிய பங்கு வகித்து வரும் நிலையில், அவரது வாழ்க்கை வரலாற்றை இயக்குநர் சேரன் திரைப்படமாக இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதில் ராமதாஸ் கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்க உள்ளதாகவும், லைகா நிறுவனம் படத்தை தயாரிக்க உள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.