"பிரியங்கா காந்தி மறுப்பு.. ராகுல் காந்தி போட்டியிடப் போவதில்லை.." திடீரென வெளியான ஷாக் தகவல்

Update: 2024-05-02 01:58 GMT

உத்தர பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர தொகுதிகளாக இருக்கும் அமேதி மற்றும் ராய்பரேலியில் போட்டியிடப் போது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த தொகுதிகளில், ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் போட்டியிட இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இருவருமே போட்டியிடப் போவதில்லை என முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்ல வேண்டியிருப்பதால், அதனை காரணம் காட்டி பிரியங்கா போட்டியிட மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் வெற்றி வாய்ப்பு குறித்த அச்சத்தாலும் அவர் போட்டியிட மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்