Puducherry | LJK | "மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு" - ஜோஸ் சார்லஸ் மார்டின் உறுதி
Puducherry | LJK | "மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு" - ஜோஸ் சார்லஸ் மார்டின் உறுதி
புதுச்சேரியில், லட்சிய ஜனநாயக கட்சி ஆட்சிக்கு வந்தால் மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என, அக்கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தெரிவித்தார். புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் V.M.C. சிவக்குமாரின் 8ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு காரைக்காலில் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு சேலை, மதிய உணவு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய ஜோஸ் சார்லஸ் மார்டின், இந்தியா இலங்கைக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவி வழங்கும் நிலையில், மீனவர் கைது விவகாரம் தொடர்வது வேதனை அளிப்பதாகத் தெரிவித்தார்.