கள்ளக்குறிச்சியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண் எதிரிலேயே தொண்டர் ஒருவரை நகர செயலாளர் தாக்கியது சலசலப்பை ஏற்படுத்தியது. கள்ளக்குறிச்சி அருகே ஏமாப்பேரில் 108 அடி உயரத்தில் அதிமுக கொடி கம்பம் நிறுவப்பட்டது. அதன் திறப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றபோது இந்த சம்பவம் அரங்கேறியது.