மீண்டும் இஸ்லாமியர்களை இழுத்த மோடி.. | PM Modi

Update: 2024-05-24 06:36 GMT

மீண்டும் இஸ்லாமியர்களை இழுத்த மோடி.. | PM Modi

காங்கிரஸ் தனது வாக்கு வங்கிக்காக நாட்டை பிரித்து இரண்டு இஸ்லாமிய தேசங்களை உருவாக்கியதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.அரியானாவில் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, காங்கிரசையும், இந்தியா கூட்டணியையும் கடுமையாக விமர்சித்தார். காங்கிரஸ் தனது வாக்கு வங்கிக்காக நாட்டை துண்டாடி, 2 இஸ்லாமிய தேசங்களை உருவாக்கியது என குற்றம் சாட்டிய அவர், இப்போது இருக்கும் இந்தியாவிலும் இஸ்லாமியர்களுக்கே முன்னுரிமை என்கிறது என குற்றம் சாட்டினார். அரியானாவில் ராமர் பெயரை சொல்பவர்களையே கைது செய்ய காங்கிரஸ் விரும்புகிறது என கூறிய பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சியில் இருந்த வரையில் கோயில் கட்ட அனுமதிக்கவில்லை என குற்றம் சாட்டினார். காங்கிரஸ் கடந்த 10 ஆண்டுகளில் செய்த பாவங்களை எல்லாம் கழுவ கடினமாக உழைத்து வருவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்