தேர்வு மட்டும்தான் எல்லாம் என்ற மனநிலையில் வாழ மாணவர்கள் ஒன்றும் ரோபோக்கள் அல்ல என பிரதமர் மோடி அறிவுறுத்தினார். டெல்லியில் உள்ள சுந்தர் நர்சரி பள்ளிக்குச் சென்ற பிரதமர் மோடி மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கி மாணவர்கள் அச்சமும் மன அழுத்தமுமின்றி பொது தேர்வுகளை எதிர்கொள்வது குறித்து உரையாடினார். அப்போது பேசிய அவர், தேர்வு மட்டும் தான் எல்லாமே என்ற மனநிலையில் இருக்க மாணவர்கள் ஒன்றும் ரோபோக்கள் அல்ல, மாணவர்கள் புத்தகத்திலேயே சிக்கிக் கொண்டிருந்தால் அவர்களால் வளர்ச்சி அடைய முடியாது என தெரிவித்தார். மேலும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் தனித்துவத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.