உடல் பருமன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 10 பிரபலங்களை பிரதமர் மோடி பரிந்துரைத்துள்ளார். தாம் பரிந்துரைத்த நடிகர் மாதவன்,மோகன்லால் பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல், மாநிலங்களவை உறுப்பினர் சுதா மூர்த்தி தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா, ஜம்மு கஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர், பளு தூக்கும் வீராங்கனை மீராபாய் சானு உள்ளிட்ட 10 பேரும் தலா 10 பேரை பரிந்துரைக்குமாறும் பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், நாம் பயன்படுத்தும் சமையல் எண்ணெயில் சுமார் 10 சதவீதம் அளவுக்கு குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.