இந்தியா வந்துள்ள கத்தார் அதிபர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்தானி, குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை நேரில் சந்தித்தார். குடியரசு தலைவர் மாளிகைக்கு வருகை தந்த கத்தார் அதிபரை, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் வரவேற்றனர். பாரம்பரிய முறைப்படி கத்தார் அதிபருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைதொடர்ந்து, வெளியுறவு அமைச்சர் உள்பட பல முக்கிய அமைச்சர்களை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார்.