பாமக என்ற ஒரே கட் சியில் இருந்ததால், தனது தந்தை காடுவெட்டி குருவின் வளர்ச்சியும் அப்படியே நின்றுவிட்டதாக, அவரது மகன் கனலரசன் தெரிவித்துள்ளர். சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்த கனலரசன், தனது தந்தை பாமகவில் இல்லாமல், தனியாக பணியாற்றி இருந்தால் வன்னியர் சமூகம் பொருளாதாரம் மட்டுமின்றி எல்லா விதத்திலும் வெற்றி பெற்று இருக்க முடியும் என கூறினார். மேலும், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு குறித்து பேசும் பாமக நிர்வாகிகள், தாங்கள் நடத்தும் கல்லூரிகளில், எத்தனை வன்னியர் சமூகத்தை சேர்ந்த இளைஞர்களை இலவசமாக படிக்க வைத்து வருகிறார்கள் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.