Minister Moorthy | Madurai |அமைச்சருடன் வாக்குவாதம்.. அவனியாபுரம் முகூர்த்தக்கால் விழாவில் சலசலப்பு
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடும் விழாவிற்கு வந்த அமைச்சர் மூர்த்தியை முற்றுகையிட்டு, கிராம கமிட்டியைச் சேர்ந்த சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியில் கிராம கமிட்டியை புறக்கணித்து, தனிநபரை மட்டும் அழைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அமைச்சர் மூர்த்தியை முற்றுகையிட்டவர்கள், கிராம மக்கள் அனைவரையும் சேர்த்தே ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.