திருப்பரங்குன்றம் மலையில் பக்தர்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் இல்லை என மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலைமீதுள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்களில் பராமரிப்பு பணிகள் என்பது 0-ஆகவே உள்ளது. மலைக்கு வரும் பக்தர்களுக்கு எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.