டிரம்ப் வரிவிதிப்பு ``விரைவில் நடவடிக்கை..'' - டெல்லி கொடுத்த ரியாக்சன்
இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பால் ஏற்படும் தாக்கங்களை ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா முதலில் என்பதை முன்னுரிமைப்படுத்துவது தான் அமெரிக்காவின் வேலை - டிரம்ப்பிற்கு அதுதான் அவரது கொள்கையாக இருந்தது... அதேபோல் பிரதமர் மோடிக்கு இந்தியா தான் முதலில் என்பது அவரது கொள்கை என்றும் குறிப்பிட்டார். அமெரிக்க வரி விதிப்பின் நிலைமையை மதிப்பாய்வு செய்து, அதன் தாக்கத்தை மதிப்பிட்டு, அதற்கேற்ப அதை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் பங்கஜ் சவுத்ரி குறிப்பிட்டார்.