"திமுக கூட்டணியை உடைக்கவே விசிகவுக்கு ஈபிஎஸ் அழைப்பு"
திமுக கூட்டணியை உடைக்கவே, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடிபழனிசாமி அழைப்பு விடுக்கிறார் என்ற விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பாஜகவை உடன் வைத்துக் கொண்டு மக்களை காப்போம் என எடப்பாடி பழனிசாமி சுற்று பயணம் செய்து, யாரை காப்பாற்ற போகிறார் என்றும் கேள்வி எழுப்பினார்.