EPS | AIADMK | Sivakasi | சிவகாசியில் தொழிலாளர்களை நேரில் பார்த்து EPS கொடுத்த உறுதி

Update: 2025-08-09 03:35 GMT

EPS | AIADMK | Sivakasi | சிவகாசியில் தொழிலாளர்களை நேரில் பார்த்து EPS கொடுத்த உறுதி

“பட்டாசு தொழில், தொழிலாளர் நலன் மேம்பட செய்வோம்“ - EPS

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு தயாரிப்பு, தீப்பெட்டி தயாரிப்பு, அச்சுத் தொழில் தயாரிப்பு உள்ளிட்ட தொழில்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி.பழனிசாமி தெரிவித்துள்ளார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் பிரச்சார பயணத்தில் ஈடுபட்டுள்ள அவர், சிவகாசியில் பட்டாசு தயாரிப்பு உள்ளிட்ட அனைத்து உற்பத்தியாளர்கள் மற்றும் வணிகர்கள் சங்கத்தை நேரில் சந்தித்தார். அப்போது, அதிமுக ஆட்சி அமைந்த உடனே ஆய்வு மேற்கொண்டு பட்டாசு தொழில் மேம்படவும், தொழிலாளர் நலன் மேம்படவும் முனைப்புடன் செயல்படுவோம் என உறுதியளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்