"சென்னை வேளச்சேரியில்" - திருமாவளவன் குறித்து பரபரப்பு தகவல் சொன்ன அண்ணாமலை
"சென்னை வேளச்சேரியில்" - திருமாவளவன் குறித்து பரபரப்பு தகவல் சொன்ன அண்ணாமலை
சென்னை வேளச்சேரியில் செயல்படும் சி.பி.எஸ்.இ. பள்ளியின் நிர்வாகக்குழு தலைவர் திருமாவளவன் தான் என, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அரசுப் பள்ளியில் ஏழை எளிய மாணவர்களுக்கு மும்மொழிகள் வேண்டாம் என்று கூறுபவர்கள் அனைவருமே, மும்மொழிகள் பயிற்றுவிக்கும் தனியார் பள்ளிகளுடன், ஏதோ ஒரு வகையில் தொடர்பில் இருப்பது ஏன்? என்றும் வினவியுள்ளார். இரட்டை வேடம் போடுபவர்கள் வரிசையில், திருமாவளவன் இருக்க மாட்டார் என்று நினைத்திருந்தேன்... ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது என்றும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.