"ராமர் கோவிலை வைத்து விளம்பரம் செய்யும் பாஜக" இனி யாரும் ஏமாற மாட்டார்கள்"

Update: 2024-01-01 13:47 GMT

சித்ரதுர்கா மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2 முறை பாஜகவின் பேச்சைக் கேட்டு ஏமாந்த மக்கள் 3வது முறையும் ஏமாற மாட்டார்கள் எனக் கூறினார். கடந்த தேர்தலில் புல்வாமா தாக்குதலை வைத்து பிரசாரம் செய்த பாஜகவினர் தற்போது ராமர் கோவிலை வைத்து பிரசாரம் செய்வதாக அவர் விமர்சித்தார். மக்கள் முட்டாள்கள் அல்ல எனக் கூறியுள்ள அவர், ராமர் அனைவருக்கும் சொந்தமானவர் எனப் பேசியுள்ளார். பாஜகவினர் ராமர் கோவிலை பிரதானப்படுத்துவது விளம்பரம் என்றும், மக்களின் கவனத்தை திசை திருப்பப் பார்க்கிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்