ஆ.ராசா மீது எடுக்கப்பட்ட திடீர் நடவடிக்கை - காரணம் என்ன?பரபரப்பு பின்னணி
வக்ஃபு வாரிய நிலம் சீர்திருத்த மசோதாவில் ஷரத்து வாரியாக விவாதம் நடத்த முடியாது என கூறப்பட்டதாக ஆ.ராசா சாடினார். இரவோடு இரவாக பொருளடக்கத்தை மாற்றியதோடு, எதிர்ப்பு தெரிவித்தால், அப்படிதான் செய்வோம் என கூட்டுக்குழு தலைவர் கூறியதாக ஆ.ராசா சாடினார். இவ்வளவு அவசரமாக மசோதாவை இறுதி செய்ய வேண்டும் என்ற அழுத்தத்தை கொடுப்பது டெல்லி தேர்தலுக்காகதான் என்ற சந்தேகம் எழுவதாக ஆ.ராசா குறிப்பிட்டார்.