Annamalai Statement | பரபரக்கும் அரசியல் சூழலில் - அறிக்கையில் அதிர்வை கிளப்பிய அண்ணாமலை
மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த போது தமிழ்நாட்டில் எல்லைகள் கடந்து தமிழ் மொழியை வளர்க்க நீங்கள் செய்த சாதனைகள் என்னென்ன? என்று முதலமைச்சருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,தமிழ் மொழி தமிழ்நாட்டின் எல்லைகளுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்பதே உங்கள் எண்ணம் என்றும் ,தமிழின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பரப்ப பிரதமர் மேற்கொண்ட சிரத்தைகளில் பாதியாவது மேற்கொண்டீர்களா? எனவும் வினவியுள்ளார். தமிழ்நாட்டில் முதல் இந்தி ஆசிரியர் பயிற்சி கல்லூரி 1922 ஆம் ஆண்டு ஈரோட்டில் தொடங்கப்பட்டதாகவும், அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.