"அண்ணாமலை சொன்னது உண்மையல்ல.. Fake" - உண்மையை உடைத்த TN Fact Check Team

Update: 2025-02-20 06:33 GMT

PM SHRI திட்டத்துக்கான நிதி முழுவதும் ஒன்றிய அரசு வழங்குவதாகவும், மாநில அரசு எந்த நிதியும் அளிக்கவில்லை என்றும் அண்ணாமலை சொன்னது தவறான தகவல் என தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. PM SHRI நிதியில் 60 சதவீதம் ஒன்றிய அரசும், 40 சதவீதம் மாநில அரசும் பங்கிட்டுக் கொள்வதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்தின் கீழ் 16 ஆயிரம் பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்படும் என்று அண்ணாமலை கூறியிருந்த நிலையில், இந்தத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் மொத்தம் 14 ஆயிரத்து 500 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்படுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்