கேரளாவில் 7 பேரைத் திருமணம் செய்து மோசடி செய்த பெண் திருவனந்தபுரம் அருகே பஞ்சாயத்து உறுப்பினரை திருமணம் செய்து அடுத்த மோசடிக்கு தயாரான போது கைது செய்யப்பட்டார். கோட்டயம் மாவட்டம் காஞ்ஞிரமட்டம் பகுதியைச் சேர்ந்த 35 வயது ரேஷ்மாவுக்கு 2 வயதில் குழந்தை உள்ளது. இவர், ஏற்கனவே 7 பேரை திருமணம் செய்து மோசடி செய்துள்ளதும் 45 நாட்களுக்கு முன்பு ஒருவரை திருமணம் செய்து கொண்டதற்கான ஆவணங்களும் அவரது பையில் இருந்தது கண்டறியப்பட்டது. இந்நிலையில் ஆரியநாட்டைச் சேர்ந்த பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவரை மேட்ரிமோனியல் விளம்பரம் மூலம் திருமணம் செய்ய முயன்ற போது பிடிபட்டார். ஒவ்வொரு திருமணத்திற்கு பின்பும் அங்கிருந்து நகைகள் மற்றும் பணத்தோடு தலைமறைவாகி வேறு இடங்களுக்கு செல்வதை ரேஷ்மா வாடிக்கையாக வைத்திருந்த நிலையில், போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.