மனைவியை பிரியும் சேவாக்.. விவாகரத்து? | Virender Sehwag

Update: 2025-01-24 02:57 GMT

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் விரேந்திர சேவாக், தனது மனைவியை பிரிந்துவிட்டதாக தகவல் பரவி வருகிறது. சேவக் - ஆர்த்தி தம்பதிக்கு கடந்த 2004ஆம் ஆண்டு திருமணமான நிலையில், இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக சேவாக்கும், ஆர்த்தியும் பிரிந்து வாழ்வதாக தகவல் பரவி வருகிறது. இன்ஸ்டாகிராமில் இருவரும் UNFOLLOW செய்துள்ள நிலையில், விரைவில் விவாகரத்துக்கு விண்ணப்பிக்க உள்ளதாக வட இந்திய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்