Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (20.01.2026) | 11 AM Headlines | ThanthiTV

Update: 2026-01-20 06:19 GMT
  • பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது..... ஆண்டின் முதல் கூட்டத்தொடருக்கு வந்த ஆளுநர் ஆர்.என். ரவியை, சபாநாயகர் அப்பாவு வரவேற்றார்...
  • சட்டமன்றத்தில் தாம், பேசும்போது ஒலிபெருக்கி அனைக்கப்படுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றஞ்சாட்டியுள்ளார்... தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட உரையில் ஆதாரமன்ற தகவல்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அவையில் இருந்து வெளிநடப்பு செய்தது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்...
  • தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக அதிமுக உறுப்பினர்கள், சட்டப்பேரவை வளாகத்தில் முழக்கமிட்டனர்.... சட்டம் ஒழுங்கு எங்கே போச்சு என்றும் அவர்கள் முழக்கமிட்டதால் சட்டப்பேரவை வளாகத்தில் பரபரப்பு நிலவியது..
  • தமிழகத்தில் நிலவும் பல்வேறு முக்கிய பிரச்சினைகளை ஆளுநர் ஆர்.என்.ரவி சுட்டிக்காட்டியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.... சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்காக அதிமுக வெளிநடப்பு செய்ததாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்...
  • கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்பேட்டை கோயில் திருவிழாவில் சிலிண்டர் வெடித்து பெண் பலியான சம்பவத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.... உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு மூன்று லட்சம் ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 18 பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்...
  • திருச்சி மாவட்டம் முசிறி அருகே நிலத்தகராறில் கர்ப்பிணியை தாக்கிய வழக்கில் தாய் மற்றும் அவரது 16 வயது மகனை போலீஸார் கைது செய்துள்ளனர்.... கர்ப்பிணியை ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்த வீடியோ வைரலான நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
Tags:    

மேலும் செய்திகள்