Kerala | Murder | பெற்ற குழந்தையை கடலில் வீசி கொன்ற கொடூர தாய்.. 15 வருடத்திற்கு பின் உடைந்த உண்மை

Update: 2026-01-20 06:18 GMT

கேரள மாநிலம் கண்ணூரில், கடந்த 2020ஆம் ஆண்டு ஒன்றரை வயது குழந்தையை கடலில் வீசி கொலை வழக்கில், தாய் குற்றவாளி என கண்ணூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த சரண்யா - பிரணவ் தம்பதிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டதால், சரண்யா தனது ஒன்றரை வயது ஆண் குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார்.

2020 பிப்ரவரி 17ஆம் தேதி நள்ளிரவில் திடீரென தனது குழந்தை மாயமானதாக சரண்யா காவல் நிலையத்தில் புகார் அளித்ததோடு, கணவர் பிரணவ் மீது சந்தேகம் இருப்பதாக கூறினார்.

விசாரணையில் குழந்தையை தான் கொலை செய்யவில்லை எனக்கூறிய பிரணவ், மனைவி மீது தான் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார்.

சரண்யாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குழந்தையை கடலில் வீசி கொன்றது தெரிய வந்தது.

கணவரின் நண்பரான நிதின் உடன் சரண்யாவுக்கு தகாத உறவு இருந்ததும், அவருடன் வாழ்வதற்காக குழந்தையை கொன்று கணவர் மீது பழியை போட திட்டமிட்டதும் அம்பலம் ஆனது.

இந்நிலையில், சரண்யா குற்றவாளி என தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம், நிதினை வழக்கில் இருந்து விடுவித்துள்ள நிலையில், தண்டனை பின்னர் அறிவிக்கப்படும் என கூறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்