உத்தரப்பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் மழை வேண்டி பாஜக நிர்வாகியை பெண்கள் சேற்று நீரால் குளிப்பாட்டி உள்ளனர். காராஜ்கஞ்ச் மாவட்டத்தில் கடும் வெப்பத்தால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், பயிர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில், மழை வேண்டி நவுதான்யா பகுதியைச் சேர்ந்த பெண்கள் பாரம்பரிய முறையில் நூதன வேண்டுதலை மேற்கொண்டனர். பாஜக நிர்வாகியான குட்டு கான் மீது சேற்று நீரை ஊற்றி பெண்கள் காஜ்ரி பாடல்கள் பாடியபடி குளிப்பாட்டினர்.