பாகிஸ்தான் ஊட்டி வளர்த்த மிருகம் இந்த TRF... இதுவரை வெளிவரா பகீர் பின்னணி ரிப்போர்ட்

Update: 2025-04-23 14:55 GMT

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம்ல பயங்கரவாத தாக்குதல் நடந்து 24 மணி நேரத்த கடந்துருக்கு. இந்த தாக்குதல் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கிருக்குன்னு தான் சொல்லனும். சம்பவம் நடந்த 24 மணி நேரத்துல உறவுகள இழந்து அடுத்து என்ன நட்க்குமோங்கர பெரும் பீதியில அப்பகுதியில இருக்கரவங்க இருக்க இன்னொரு பக்கம் சமூக வலைதளங்கள்ள கண்டன குரல்கள் ஓங்கி ஒலிச்சிட்டிருக்கு. இந்த தாக்குதல்ல 26 பேர் உயிரிழந்துருக்கர சூழல்ல, அந்த பகுதி முழுசையும் ராணுவம் முற்றுகையிட்டுருக்கு. பயங்கரவாதிகள தேடக்கூடிய பணிகள ராணுவம் தீவிரமாகியிருக்கர வேளையில, தாக்குதலுக்கு பின்னணியில இருப்பது யார்? அப்படீங்கர கேள்வியும் வலுத்துருக்கு. பயங்கரவாத தாக்குதல் நடந்த பகுதியில் தேசிய புலனாய்வு பிரிவு சோதனைய மேற்கொண்டுருக்கு. குர்தா-பைஜாமாக்கள போட்டுட்டு வந்த 5–6 பயங்கரவாதிகள், பஹல்காம்ல இருக்கர பைசரன் பள்ளத்தாக்க சுத்தி இருக்கர அடர்ந்த காட்டிலிருந்து அதிரடியா வந்து கண்ணிமைக்கும் நொடில இந்த தாக்குதல நடத்தியிருக்கிறாங்க. இந்த தாக்குதலுக்கு TRFநு சொல்லக்கூடிய The Resistance Frontங்கர பயங்கரவாத அமைப்பு தான் பொறுப்பேத்துருக்கு.

Tags:    

மேலும் செய்திகள்