கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
கேரள மாநிலத்தில் கடந்த இரு நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், தற்போது கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இடி மற்றும் மின்னலுடன் கூடிய காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. திருச்சூர், பாலக்காடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் மற்றும் இடுக்கி மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.