Police | ViralVideo | விரட்டிய கொடூரன்.. அலறி ஓடிய பெண் - பதற வைக்கும் வீடியோ
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பயிற்சி மையத்திற்கு சென்று கொண்டிருந்த இளம் பெண்ணை பின் தொடர்ந்து இளைஞர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசம் ராம்நகர் மொஹல்லா என்ற பகுதியில் பயிற்சி மையத்திற்கு சென்று கொண்டிருந்த இளம் பெண்ணை அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் பின்தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அச்சமடைந்து பயிற்சி மைய ஊழியர்களின் உதவியை நாடிய இளம் பெண், செல் போன் வாயிலாக காவல் நிலையத்திற்கு அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார் இளைஞர் கைது சிரையில் அடைத்தனர்.