Chandrababu Naidu | RSS தலைவர் மோகன் பகவத்தை அருகே வைத்து கொண்டு சந்திரபாபு நாயுடு பேசிய பேச்சு
இந்தியாவில் ஒவ்வொரு தம்பதியினரும் 3 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்...
திருப்பதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்துடன், சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார்.. அதில் பேசிய சந்திரபாபு நாயுடு, “சூப்பர் மேனைவிட அனுமான் வலிமையானவர், அயர்ன் மேனை விட அர்ஜுனன் சிறந்த வீரர் என்று தெரிவித்தார்.
நமது குழந்தைகளை மேற்கத்திய சூப்பர் ஹீரோ கதைகளுக்குள் முடக்கிவிடாமல், இந்தியாவின் இதிகாசங்கள் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை புகட்ட வேண்டும் என்றார்.
நாம் மக்கள் தொகையில் கவனம் செலுத்தினால், 2047க்குப் பிறகும் உலகளவில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் எனவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.